அரசு நிறுவனங்கள் மீது அவதுாறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

V. Senthil Balaji Government of Tamil Nadu DMK
By Thahir Oct 25, 2022 10:15 AM GMT
Report

அரசு நிறுவனங்கள் மீது அவதுாறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை 

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.

Legal action will be taken against defamation - Minister Senthilbalaji

கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.

 அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது. என்று தெரிவித்துள்ளார்.