விவரம் தெரியாமல் அண்ணாமலை பேச கூடாது - பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை..!
ஓபிஎஸ்ஸை அண்ணாமலை முன்னாள் முதல்வர் என குறிப்பிட்டதற்கு ஓபிஎஸ் தரப்பு பெங்களூர் புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் இடம் பெறுவாரா?
தொடர்ந்து அதிமுகவில் நீடிக்கும் உட்கட்சி பூசல் நீண்டுகொண்டே வருகிறது. இதற்கிடையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இடம் பெறுவாரா? என்பதும் தற்போது கேள்வி குறியாக மாறியுள்ளது.
காரணம், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்படாததே ஆகும். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்றும் ஓபிஎஸ்'ஸை முன்னாள் முதல்வர் என்றும் அண்ணாமலை குறிப்பிடுவதற்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புகழேந்தி எச்சரிக்கை
இது குறித்து செய்தியாளரர்களை சந்தித்த போது பேசிய அவர், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு, விஷயம் தெரியாமல் பேசக்கூடாது என்றும் சாடியுள்ளார்.
இனியும், அண்ணாமலை அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டால் அண்ணாமலை மீது நிச்சயமாக சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் புறக்கணிக்கப்பட்டதால், ஓபிஎஸ் தரப்பு அண்ணாமலைக்கு எதிராக திரும்பியுள்ளதா? என்ற கேள்வி தற்போது புகழேந்தியின் எச்சரிக்கை மூலம் எழுந்துள்ளது.