‘’ இனிமே அவ்வுளவுதான் பசுத்தோல் உதிர்ந்துவிட்டது ‘’ : கமல்ஹாசன் விமர்சனம்

elections kamalhasan petroldieselhigh
By Irumporai Mar 23, 2022 04:56 AM GMT
Report

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து நடிகர் கமல்ஹாசன்  தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்த நிலையில் பெட்ட்ரோல் டீசல் விலைவாசி உயர்வு குறித்து  கருது தெரிவித்துள்ளா மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் :

 ‘’ தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள்.

ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே ‘’  என பதிவிட்டுள்ளார்.