இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் -500-ஐ நெருங்கும் உயிரிழப்பு!
லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் 492 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல்
2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் ராணுவ விமானப்படை இடங்களைக் குறிவைத்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலை தாக்கியுள்ளனர்.
தாக்குதல்
முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
தொடர்ந்து இஸ்ரேலுக்குச் சர்வதேச அளவில் பல அழுத்தங்கள் கொடுத்தாலும் ஹாமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை இந்த தாக்குதலை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களின் விவரம் குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை.