கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறுவோம் - கிராம மக்கள் திடீர் அறிவிப்பு!
கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதாக மேல்பாதி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
பட்டியலின மக்கள்
விழுப்புரம், வளவனூர் அருகே மேல்பாதி கிராமம் உள்ளது. அங்கு உள்ள திரெளபதி அம்மன் கோவில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற கிராம கட்டுப்பாடு அங்கு நீண்ட காலமாக இருந்துவருகிறது.
இநிந்லையில், திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து, பட்டியலின மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியவில்லை.
திடீர் அறிவிப்பு
மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உறுதியாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதனையடுத்து கோவில் கடந்த மாதம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுவரை இருமுறை விசாரணை நடத்தியும் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை.
இந்நிலையில், திரெளபதி அம்மன் கோயிலில் சென்று தாங்கள் வழிபாடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இந்து மதத்திலிருந்து வெளியேற உள்ளோம் என பட்டியலின தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.