கனமழை எதிரொலி..! டிச. 4 -ஆம் தேதி 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

Kanchipuram Chennai Chengalpattu Thiruvallur
By Karthick Dec 02, 2023 12:09 PM GMT
Report

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த புயலின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

கனமழை

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

leave-declared-in-4-districts-due-to-heavy-rain

நாளை இது தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்திற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலானது வடமேற்கு திசையில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடைந்து 5-ம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையைக் கடக்கவுள்ளது.

leave-declared-in-4-districts-due-to-heavy-rain

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 4-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.