இன்னொரு மொழி கற்பது கஷ்டம்; செருப்பு போடாதது ஏன்..? நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
எனக்கு இன்னொரு மொழி கற்றுக்கொள்வது கடினமானது என்று நடிகர் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.
ஹிட்லர்
இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ரியா சுமன் ஜோடியாக நடித்துள்ள படம், ‘ஹிட்லர்’. இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்திற்கு மெர்வின் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹிட்லர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி "இந்தப் படத்தின் நாயகி ரியா சுமன், அழகாகத் தமிழ் பேசுகிறார்.
விஜய் ஆண்டனி
எனக்கு இன்னொரு மொழி கற்றுக்கொள்வது கடினமானது. தெலுங்கில் எனக்கு ‘அந்தரிக்கி நமஸ்காரம்’ தவிர வேற எதுவும் தெரியாது.
ஆனால், ரியா இவ்வளவு தெளிவாகத் தமிழ் பேசுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் செருப்பு போடாமல் செல்வது பற்றி கேட்கிறார்கள். அதற்குக் காரணம் ஏதும் இல்லை. திடீரென்று செருப்பு போடத் தோன்றினால் போட்டுவிடுவேன்" என்று கூறியுள்ளார்.