தி லெஜண்ட் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சரவணா ஸ்டோரின் உரிமையாளரான அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தி லெஜெண்ட்.
தி லெஜெண்ட்
இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.
இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார். மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அன்புச்செழியன்
இந்த படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி உட்பட பான் இந்தியா திரைப்படமாக தி லெஜண்ட் வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தி லெஜெண்ட் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்புகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான அன்புச்செழியன் படத்தை வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின்றது.