ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர் - என்னப்பா இது சோதனை
பிரபல சின்னத்திரை சீரியலான ராஜா ராணியில் இருந்து முக்கிய நடிகர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சில சீரியல்கள் அடுத்தடுத்து பாகங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் மீண்டும் ராஜா ராணி-2 என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்ட இந்த சீரியல் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக்காகும். இதில் ஹீரோவாக சித்துவும், ஹீரோயினாக ஆல்யாவும் நடித்து வருகின்றனர். முதல் சீசனை இயக்கிய பிரவீன் பெண்ணெட் தான் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார்.
இதனிடையே ராஜா ராணி 2 சீரியல் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகியுள்ளார். முதலில் ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தான் விலகுவதாக தகவல் வெளியான நிலையில் அவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சால்சா மணி தான் சீரியல் இருந்து விலகி இருக்கிறார். இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.