காந்திக்கு முன் இந்திய ரூபாய் நோட்டுகளில் யார் படங்கள் இருந்தது தெரியுமா? பெரிதாக அறியப்படாத தகவல்!
இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருந்த நபர்கள் குறித்து பார்க்கலாம்.
இந்திய ரூபாய் நோட்டு
உலகம் முழுவதும் ரூபாய் நோட்டுகளில் நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, இந்தியாவைப் பொறுத்தவரை மகாத்மா காந்தியின் உருவப்படம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூபாய் நோட்டுகளில் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு முன்பாக பல முக்கிய பிரமுகர்களின் படங்கள் இந்திய ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டது.
முக்கிய பிரமுகர்கள்
1917ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டது. அப்போது இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு அசோகர் தூணுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
கோவாவில் கடந்த 1961 வரை எஸ்குடோ கரன்சி புழக்கத்தில் இருந்தது. அந்த நாணயத்தில் இரண்டாம் ஜான் மன்னரின் புகைப்படம் இருந்தது. 1964க்குப் பிறகு புதுச்சேரியில் பிரான்ஸ் அரசு வெளியிட்ட நோட்டுகளும் ரூபாய் என்றே அழைக்கப்பட்டன.
1954 வரை பிரான்ஸ் நாட்டின் காலனியாக புதுச்சேரி இருந்தது. 1966ல் தான் காந்தியின் புகைப்படத்துடன் கூடிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது.
அதில், இடம்பெற்றுள்ள காந்தியின் படம், 1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதி பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் என்பவருடன் இருந்தபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.