பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம் : கடும் விமர்சனத்தில் பாடி ஸ்பிரே நிறுவனம்

By Irumporai Jun 04, 2022 07:30 PM GMT
Report

ஆண்களுக்கான பாடி ஸ்ப்ரே விளம்பரங்களின் கன்டென்ட்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இரண்டு புதிய லேயர் ஷாட் விளம்பரங்களை ஒளிபரப்ப விளம்பரத் தரக் கவுன்சில் ஆஃப் இந்தியா தடை விதித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் போது சோனி லிவில் இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன.  

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம் :  கடும் விமர்சனத்தில் பாடி ஸ்பிரே நிறுவனம் | Layer Shot Body Spray Ads Causes Gets Notice

இந்த விளம்பரங்கள் பெண்களுக்கு அவமரியாதை விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், கற்பழிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் சனிக்கிழமை ஒரு ட்வீட் செய்துள்ளார்.

இந்த விளம்பரங்கள் ஆண்மைத்தனத்தின் விஷத்தன்மையை மோசமாக வெளிப்படுத்துகின்றன என்று அவர் அதை எடுத்துக் காட்டினார். அதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இந்த விவகாரம் சென்றது.  

சில பயனர்கள் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் (ASCI) ஐ இந்த பதிவில் டேக் செய்தனர். அதனை தொடர்ந்து இது "ASCI விதிமுறைகளை தீவிரமாக மீறுகிறது" என்று ASCI கருத்து தெரிவித்தது. "எங்களை டேக் செய்ததற்கு நன்றி. இந்த விளம்பரம் ASCI வரையறைகளை தீவிரமாக மீறுகிறது மற்றும் பொது நலனுக்கு எதிரானது.

நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், விளம்பரத்தை ஒளிபரப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டு, விளம்பரதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று விளம்பர ஒழுங்குமுறை அமைப்பு ட்விட்டரில் எழுதி இருந்தது.  

இதனிடையே, (Layer’r Shot) டியோடரண்ட் விளம்பரம் (Deodorant advertisement) நாட்டில் கற்பழிப்பு மனநிலையை அப்பட்டமாக ஊக்குவிக்கிறது.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனைத்து தளங்களில் இருந்து விளம்பரம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என டெல்லி பெண்கள் ஆணையம் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.