நீதிமன்றத்தில் வழங்கறிஞருக்கு நடந்த கொடூரம்.. சரமாரி வெட்டு - நடுங்க வைக்கும் சம்பவம்!

Tamil nadu Attempted Murder Crime Krishnagiri
By Swetha Nov 21, 2024 06:16 AM GMT
Report

வழங்கறிஞர் ஒருவருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு தாக்குதல் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழங்கறிஞர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், மூன்று நீதிமன்றங்கள், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், ஆகியவை செயல்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் வழங்கறிஞருக்கு நடந்த கொடூரம்.. சரமாரி வெட்டு - நடுங்க வைக்கும் சம்பவம்! | Lawyer Was Attacked In Court In Krishnagiri
இங்கு மக்கள் கூட்டம் இருந்துக்கொண்டே இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில், வழக்கம்போல் நீதிமன்றம் இயங்கிகொண்டு இருந்த சமயம் ஓசூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கண்ணன்(30), வழக்கறிஞர் ஆவார்.

இவர் ஓசூர் உழவர் சந்தை அருகில் உள்ள மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் ஜூனியராக 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கு சம்மந்தமாக ஆஜராகிவிட்டு வெளியே நடந்து வந்தார்.

கொடூரம்

இவரை பின்தொடர்ந்து வந்த ஓசூர் நாமல்பேட்டை பகுதியை சேர்ந்த குமாஸ்தா ஆனந்தகுமார் (39) என்பவர், றைத்து வைத்திருந்த அரிவாளாலால் கண்ணனை சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து அங்கேயே கீழே விழுந்தார்.

நீதிமன்றத்தில் வழங்கறிஞருக்கு நடந்த கொடூரம்.. சரமாரி வெட்டு - நடுங்க வைக்கும் சம்பவம்! | Lawyer Was Attacked In Court In Krishnagiri

ஆனந்தகுமார் அவாரை தலை, முகம், கழுத்து உள்பட உடலில் 8 இடங்களில் சரமாரியாக வெட்டினார். அதன் பிறகு ஆனந்தகுமார் பதற்றமே இல்லாமல் நேராக நீதிமன்றம் உள்ளே சென்று சரண் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடயே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வழக்கறிஞர் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான சத்தியவதி கைது செய்யப்பட்டார்.