சட்டையை கழட்டிவிட்டு போக்குவரத்து காவலருடன் தகராறில் ஈடுபடும் வழக்கறிஞர் - வைரலாகும் வீடியோ

Tamil Nadu Police
1 மாதம் முன்

கும்பகோணத்தில் வழக்கறிஞர் ஒருவர், போக்குவரத்து பெண் காவலர் ஒருவரிடம் மிரட்டும் வகையில் ஒருமையில் பேசும் வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதியாகும் . இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் பல்வேறு நெருக்கடிகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் நேற்று மாலை பழைய பாலக்கரையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டுள்ளார்.

இதை பார்த்த அங்கு பணியில் இருந்த துர்கா என்ற பெண் காவலர் அவரை பல முறை எச்சரித்துள்ளார்.

சட்டையை கழட்டிவிட்டு போக்குவரத்து காவலருடன் தகராறில் ஈடுபடும் வழக்கறிஞர் - வைரலாகும் வீடியோ | Lawyer Quarrels With Traffic Police In Kumbakonam

ஆனால் வழக்கறிஞர் ராபர்ட் தனது சட்டை பட்டன்களை கழட்டியவாரு என்னோடு ஒன்டிக்கு ஒன்டி சண்டைக்கு வருவாயா ? என்றும் காவலர் துர்காவிடம் ஒருமையில் பேசியுள்ளார்.

இந்த காட்சி சமூக வளைதலங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பெண் காவலர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.