Thursday, Jul 24, 2025

பிரபல வழக்கறிஞர் 68வது வயதில் 3-வது திருமணம்; நம்பர் 1 லாயர் - என்ன செய்திருக்கிறார்?

London Marriage
By Sumathi 2 years ago
Report

பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தனது 68 வயதில் 3வது திருமணம் செய்துள்ளார்.

ஹரிஷ் சால்வே

நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் ஹரீஷ் சால்வே (68). 1999ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். மீனாட்சி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

பிரபல வழக்கறிஞர் 68வது வயதில் 3-வது திருமணம்; நம்பர் 1 லாயர் - என்ன செய்திருக்கிறார்? | Lawyer Harish Salve Marries 3Rd Time In London

இவர்களுக்கு சாக்ஷி, சானியா என்ற இரு மகள்கள் உள்ளனர். 38 ஆண்டிற்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின், 2020ல் கரோலின் பிரஸ்சார்டு என்பவரை சால்வே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதுவும் பாதியிலேயே முடிந்துவிட்டது.

3வது திருமணம்

இந்நிலையில் தற்போது லண்டனில் திரினா என்ற பெண்ணை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இதில், இரு தரப்பினரின் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் லலித் மோடி, அவருடைய காதலி, மாடல் அழகி உஜ்வாலா ராவத், ஸ்ரீபிரகாஷ் லோகியா, லட்சுமி மிட்டல், கோபிசந்த் இந்துஜா, நீடா அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரபல வழக்கறிஞர் 68வது வயதில் 3-வது திருமணம்; நம்பர் 1 லாயர் - என்ன செய்திருக்கிறார்? | Lawyer Harish Salve Marries 3Rd Time In London

இவர் பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை கையாண்டுள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றத்தால் உளவாளி என குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதிட்டார். 2002 ஆம் ஆண்டு காரை தாறுமாறாக ஓட்டிவிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு நடிகர் சல்மான் கான் தப்பியோடிய வழக்கிலும் அவர் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அது போல் டாடா குழுமத்தினர், ரிலையன்ஸ் நிறுவனம், ஐடிசி குழுமம் உள்ளிட்டோருக்கு இவர்தான் குடும்ப லாயர். தற்போது, இங்கிலாந்து நீதிமன்றங்களில் அரசு குடும்பத்து வழக்கறிஞராக இருந்து வருகிறார்.