கந்துவட்டி கொடுமை... - புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்... - பரபரப்பு சம்பவம்...!
தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமையை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்தவர் அய்யலுச்சாமி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டி காரணமாக நிறைய குடும்பங்கள் அவமானத்தால் உயிரிழந்து வருகின்றனர் என்றும், கந்து வட்டி விடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அய்யலுச்சாமி வினோத ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர், கடம்பூர் காட்டுப்பகுதியில் உள்ள புளியமரத்தில் தனது காலில் கயிறுக்கட்டி தலைகீழாக தொங்கினார். இவர் சுமார் 1 மணி நேரமாக தலைக்கீழாக தொங்கி ஆர்பாட்டம் நடத்தி, கோஷங்களை எழுப்பினார்.
வழக்கறிஞர் அய்யலுச்சாமி இப்படி தலைக்கீழாக தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.