மதுரையில் பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42) இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் அவரது வீட்டில் தன் கையால் எழுதப்பட்ட 10 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இதனிடையே கடந்த (ஏப்ரல்) மாதம் 2-ஆம் தேதி, பசும்பொன் தெருவில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி (32) இரு சக்கர வாகனத்துடன் மாயமானார்.
ஆசிரியர் சித்ரா தேவியை வழக்கறிஞர் கிருஷ்ணன் கடத்தி வைத்திருப்பதாகக் கூறி சித்ரா தேவியின் தந்தை கன்னையா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கன்னையா நீதிமன்றத்தை நாடினார். ஒரு மாத காலம் ஆன நிலையில் காவல்துறை விசாரணை மெத்தனமாக இருந்ததால் தனது மகளின் சாவில் காவல்துறை பதில் சொல்ல வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் வழக்கறிஞர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாயமான பெண்ணை தனது வீட்டில் வைத்து கொன்று புதைத்துவிட்டதாக தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டதாக வழக்கறிஞரின் 10 பக்க தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞரே பெண்ணை தனது வீட்டில் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது