மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்! விவகாரத்து கேட்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னையில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணை, வக்கீலே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த 43 வயது பெண் தனது கணவருடன் விவகாரத்து பெற முடிவெடுத்துள்ளார். அதனால் அங்குள்ள நீதிமன்றத்தில் பணிபுரியும் டார்ஜன் என்ற வக்கில்லை அணுகியுள்ளார். அந்த பெண்ணின் அழகில் மயங்கிய டார்ஜன் வழக்கை நானே நடத்துகிறேன் என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்கு வந்து வாங்கி கொள்வதாக கூறியும் அந்த பெண் வீட்டுக்கு சென்றார்.
வீட்டிற்கு சென்ற டார்ஜன் தான் வாங்கி சென்ற குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கினார்.
பிறகு டார்ஜன் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து, அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர் அந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்ததும், அந்த வக்கீல் அந்த பெண்ணிடம் அவரின் நிர்வாண படங்களை காமித்து சமூக ஊடங்களில் வெளியிடுவதாக மிரட்டி பல லட்சம் பணம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் 7 லட்ச ரூபாயை வக்கீலிடம் கொடுத்துள்ளார். இதை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், அடிக்கடி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் மிரண்டுபோன அந்த பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வக்கீலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.