லாரன்ஸ் - வெற்றிமாறன் இணையும் படத்தின் அப்டேட் வெளியீடு

Vetrimaran Ragava Lawrence Ss thaman
By Petchi Avudaiappan Jul 15, 2021 11:11 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் வெற்றி மாறன் இணையும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் "அதிகாரம்" . இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசனும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

லாரன்ஸ் - வெற்றிமாறன் இணையும் படத்தின் அப்டேட் வெளியீடு | Lawrence Movie Updtate Released

இந்நிலையில் அதிகாரம் படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்கள், சிவலிங்கா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள தமன், தற்போது 5-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.