சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி
சட்டத்துறை அமைச்சர் சி.வி. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தாவல் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்த போதிலும் சாமானிய மக்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நேற்று திண்டிவனம் நகராட்சியில் பணியாற்றும் 304 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் முககவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கிவிட்டு திண்டிவனத்தில் உள்ள தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் உடனே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.