தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். மிகுந்த பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் இடையே தமிழ்நாடு சட்டசபை கூட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நேற்று முன்தினம் ஆளுநர் உரை தொடங்கிய போது திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அவர்களது ஆட்சியில் என்னென்ன சட்ட ஒழுங்கு எப்படி நடந்தது என்பதை தான் பட்டியலில் வைத்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து சட்டசபையிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணியினர் வெளிநடப்பு செய்தனர். பின் பழனிசாமி அளித்த பேட்டியில், அண்மையில் திமுக உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட பெண் காவல் அதிகாரி பாலியல் தொல்லை விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேசினார்.
மேலும் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையெல்லாம் கண்டித்துதான் தாங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததாக கூறினார்.