தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - சசிகலா விமர்சனம்..!
DMK
AIADMK
V. K. Sasikala
By Thahir
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சசிகலா விமர்சித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
அதிமுகவில் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதே எனது வேலை என வி.கே.சசிகலா நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வி.கே.சசிகலா பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து அதில் தன்னால் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
அடுத்ததாக, மக்களின் பார்வையில் அதிமுக தான் தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்றும், கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சி எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் வி.கே.சசிகலா பேசியிருந்தார்.