தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார்

AIADMK R. N. Ravi Governor of Tamil Nadu Edappadi K. Palaniswami
By Thahir May 22, 2023 08:03 AM GMT
Report

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுகவினர் பேரணியாக சென்று கிண்டியில் உள்ள ஆளுநரிடம் மனு அளித்தனர்.

அதிமுகவினர் புகார் மனு 

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க சென்றனர்.

இதனால் கிண்டி செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்ற நிலையில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

law-and-order-has-deteriorated-in-tamil-nadu-eps

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், செல்லுார் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், திமுக அரசின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்.

விஷச்சாராய உயிரிழப்பு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை உள்ளிட்ட சம்பவங்களை எடுத்து கூறினோம்.

போலி மதுப்பானங்கள், கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அரசுக்கும் போலீசாருக்கும் தெரிந்திருக்கிறது. போலி மதுபானம் குடித்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியே வரக்கூடாது என அரசு முயற்சி செய்கிறது.

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. தமிழகத்தில் ரவுடிகள், திருடர்கள் காவல்துறையை கண்டு பயப்படுவது இல்லை. என்று தெரிவித்துள்ளார்.