தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது ஈபிஎஸ் குற்றச்சாட்டு - பதிலடி கொடுத்த முதலமைச்சர்

M K Stalin Edappadi K. Palaniswami
By Thahir Jan 11, 2023 06:46 AM GMT
Report

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் பதிலடி கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று 3வது நாளாக கூடியது அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இந்த நிலையில் தனக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவு-விடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் நாள் தோறும் கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும், பென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என பழனிசாமி குற்றம்சாட்டினார்.

law-and-order-has-broken-down-in-tn-eps-alleges

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி 

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் ஆதாரங்களோடு நிருப்பிக்க தயாரா? பத்திரிக்கை செய்திகளை வைத்துக் கொண்டு பேச கூடாது என்றார்.

மேலும் அதிமுக ஆட்சியின் போது நடந்த சம்பவங்களை பட்டியலிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.