திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்கப்படும் - முக ஸ்டாலின்

Parliament dmk stalin vellore
By Jon Mar 30, 2021 02:33 AM GMT
Report

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு இரும்பு கரம் கொண்டு பாதுகாக்கப்டும் என்றும் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேலூர் மாவட்டம் ஆணைக்கட்டில் பேச்சு. திமுக கட்சி சார்பில் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் காட்பாடி துரைமுருகன் வேலூர் கார்த்திகேயன் கே.வி.குப்பம் (தனி) சீதாராமன் அணைக்கட்டு நந்தகுமார் குடியாத்தம் (தனி) அமுலு ஆகிய 5 சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் அருகே அணைக்கட்டு என்ற இடத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின் கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டிய காவல்துறை உயரதிகாரிகள் காவல்துறையில் உள்ள பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போயுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு ,சாத்தான் கொள்ளையில் அப்பா மகன் துப்பாக்கிச் சூடு, மேலும் தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படும், காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் மக்களிடத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது.

அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறாது. தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களை அதிமுக அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பின் நோக்கி சென்றுள்ளது. அதனை மீட்டெடுக்க திமுகவை மக்கள் வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். திமுக ஆட்சியில், ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மூன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். தொழில் நிறுவனங்களில்75% தமிழர்களுக்கு வழங்க சட்டம் கொண்டுவரப்படும். வேலூர் மாவட்டத்தில் தோல் தொழில் பூங்கா மலர் பூங்கா ஜவுளி பூங்கா சிறப்பு பொருளாதார மண்டலம் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு க ஸ்டாலின் கூறினார்.


GalleryGallery