44 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை - அட இவங்களா..!
நடிகை லாவண்யா திருப்பதியில் திருமணம் செய்துள்ளார்.
லாவண்யா தேவி
சூர்யவம்சம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. 90களில் பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன்பின், ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து, ஜோடி, சேது போன்ற படங்களிலும் நடித்துள்ளார். திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்டிங் கேரக்டரில் கலக்கி வந்தார்.
திருமணம்
அதனையடுத்து சினிமாவில் இருந்து சின்னத்திரை பக்கம் திரும்பினார். தற்போது சன் டிவி-யின் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். அந்த புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.