தீவில் ஒடும் தீப்பிழம்பு ,வைரலாகும் வீடியோ - எங்கு தெரியுமா ?

Viral Video
By Irumporai Jul 26, 2022 06:30 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஹவாய் தீவில் உள்ள கிலவியா எரிமலை வெடித்ததில், தீ குழம்புகள் ஆறுபோல் ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பதற்கு தங்கம் உருகி ஓடுவதைப் போல் இருக்கிறது.

எரிமலை தீ பிழம்பு

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சுவரஸ்யமான மற்றும் வித்தியசமான வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகிறது.

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைக்கு கையடக்க பொருடகளாக மாறிவிட்ட நிலையில், உலகின் எட்டு திசைகளின் எல்லை முழுவதும் பயணிக்கும் பயணிகள் தாங்கள் காணும் இயற்கை அழகினை தான் கண்டு ரசிப்பதோடு அதனை தனது மொபைல் போன் மற்றும் கொண்டு செல்லும் கேமராவில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக பலர் கொண்டுள்ளனர்.

தீவில் ஒடும் தீப்பிழம்பு ,வைரலாகும் வீடியோ -  எங்கு தெரியுமா ? | Lava Flowing From Kilauea Volcano In Hawaii

இதில், சமீபத்தில் வைரலாகிவரும் ஒரு வீடியோ காண்போர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஹவாய் தீவில் உள்ள கிலவியா எரிமலை வெடித்து வேகமாக ஓடும் எரிமலைக் குழம்பின் வீடியோ மிகவும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ

மிகவும் அண்மையில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், வேகமாக ஓடும் எரிமலைக் குழம்பு சிதறிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கையில், தங்கம் உருகி ஓடுவதைப் போல் இருக்கிறது.

இயற்கையின் அழகினைச் சொல்லும் இந்த வீடியோ மிகவும் அருகில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதால், ஒரு சிலர் ஆபத்தான முயற்சிகளை தயவு செய்து செய்ய வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள் ட்ரோன்களின் மூலம் எடுக்கப்ட்டிருக்கும் இந்த வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.