விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி : சி51 ராக்கெட்
பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து சற்று நேரத்திற்கு முன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் முதல் ராக்கெட்டாகும்.
இந்த ராக்கெட்டில் உள்ள அனைத்து செயற்கைக் கோள்களும் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமேசானியா-1 மிஷன் செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ, விண்ணுக்கு செலுத்தவுள்ளது. இந்த அமேசானியா, 637 கிலோ எடை கொண்டதாகும்.
அதன் ஆயுள் காலம் 4 ஆண்டுகள் என்றும், இந்த செயற்கைகோள் பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டதாகும். இது மட்டுமின்றி,இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்களும், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
#WATCH ISRO's PSLV-C51 carrying Amazonia-1 and 18 other satellites lifts off from Satish Dhawan Space Centre, Sriharikota pic.twitter.com/jtyQUYi1O0
— ANI (@ANI) February 28, 2021