தீபாவளி மளிகைத் தொகுப்பு விற்பனை தொடக்கம்.., யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Diwali
By Yashini Oct 30, 2026 08:50 AM GMT
Report

launch of the diwali grocery kit distribution scheme- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 200 ருபாய்க்கு 10 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்தச் சிறப்புத் தொகுப்பில் சமையலுக்குத் தேவையான 10 வகையான மளிகைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

தீபாவளி மளிகைத் தொகுப்பு விற்பனை தொடக்கம்.., யாருக்கெல்லாம் கிடைக்கும்? | Launch The Diwali Grocery Kit Distribution Scheme

அதன்படி, இந்தச் சிறப்புத் தொகுப்பில் 250 கிராம் கடலைப் பருப்பு, 250 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் மிளகாய், 150 கிராம் தனியா, 150 கிராம் பூண்டு, 250 கிராம் புளி, 100 கிராம் கடுகு, 100 கிராம் உளுத்தம் பருப்பு, 50 கிராம் சீரகம், 50 கிராம் சோம்பு ஆகிய 10 வகையான மளிகைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பொருள்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்குச் சென்று இந்த மளிகைத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.