தனுஷ் விஷயத்தில் திட்டம் போட்டு சாதித்த லதா ரஜினிகாந்த்? - புதிய தகவல்
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் லதா ரஜினிகாந்த் எடுத்த முயற்சி பயனளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஐஸ்வர்யாவின் தாயார் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், பைனான்ஸியர்களை தொடர்பு கொண்டு இனி யாரும் தனுஷ் படத்திற்கு பணம் கொடுக்கக் கூடாது என தெரிவித்ததாகவும், இதனைக் கேள்விப்பட்ட தனுஷ் கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த விஷயத்தில் கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர் தனுஷிடம் நடக்கப்போகும் சிக்கலை தெரிவித்ததாகவும், அதனை உணர்ந்த தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லதா ரஜினிகாந்த் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.