ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து.., லதா ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம்
தவெக போராட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆருக்கு பிறகு மிகப்பெரிய நடிகராக இருந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என நினைத்தார்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வந்த மிரட்டல்களால் அவர் அரசியலுக்கு வராமல் விலகினார் என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்தது.

இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்றார்.
மேலும், தன்னை ஆதரித்த அரசியல் தலைவர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்தார்.
மேலும், "ரஜினியே இது உண்மை இல்லை என்று கூறிவிட்டார். அதனால் நான் இதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil