மகளை பிரிந்த தனுஷூக்கு ஆப்பு வைக்கும் லதா ரஜினிகாந்த்? - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

dhanush rajinikanth latharajinikanth Aishwaryarajinikanth
By Petchi Avudaiappan Feb 02, 2022 10:24 PM GMT
Report

தனுஷின் விவாகரத்து நிகழ்வால் மனைவி ஐஸ்வர்யாவின் தாய் லதா ரஜினிகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர்  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளம் பக்கம் மூலம் அறிவித்தனர்.

இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது தன் மகளை பிரிந்துவிட்டதால் தனுஷ் மீது மாமியார் லதா ரஜினிகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால்  தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு இனி தனுஷுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

தனுஷ்  ஐஸ்வர்யாவை பிரிந்த சோகத்தில் இருந்து தன் கவனத்தை திசை திருப்ப புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் இந்த செயலால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

You May Like This