ரஜினியிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட லதா ரஜினிகாந்த் - புதிய தகவலால் அதிர்ச்சி

dhanush rajinikanth latharajinikanth aishwaryarajinikanth
By Petchi Avudaiappan Mar 01, 2022 09:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ரஜினிகாந்திடம் அவரது மனைவி லதா கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் நெல்சனுடன் இணையவுள்ளதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இதனிடையே நடிகர் தனுஷ் - மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விவகாரம் அவரது மனநலனை கடுமையாக பாதித்ததாக கூறப்படுகிறது. தனது மகளின் மீதும் தனுஷின் மீதும் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரஜினி, தனது மகள்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் லதாவிற்கு இந்த விஷயம் முன்னதாக தெரிந்திருக்கலாம் என்ற யூகத்தால் அவர் மேலும் கோபமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதன் காரணமாக வீட்டில் தனிமையில் யாரிடமும் பேசாது இருக்கும் லதா தனது கணவர் ரஜினியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் ஆத்திரத்தில் அதனைப் பொருட்படுத்தாத ரஜினி ஒரு கட்டத்தில் கதறி அழுது மன்னிப்பு கேட்டு லதா மன்னிப்பு கேட்டவுடன் மனமிறங்கி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

You May Like This