அண்ணாமலை அறிவிப்புக்கு பின் லதா ரஜினிகாந்தின் அதிரடி முடிவு - போட்டியா? ஆதரவா?

Tamil nadu K. Annamalai Latha Rajinikanth Political Development
By Vinoja Jun 06, 2026 06:30 AM GMT
Report

தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை "இது நம்ம இயக்கம்" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறி தேர்தல்களிலும் பங்கேற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை" என்ற புதிய மக்கள் இயக்கத்தை அறிவித்துள்ளார்.இந்த அமைப்பு அரசியல் கட்சியாக அல்லாமல், சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் பங்களிப்பை மையமாகக் கொண்டு செயல்படும் என அவர் காணொளி வெளியிட்டு அறிவித்திருந்தார்.

அண்ணாமலை அறிவிப்புக்கு பின் லதா ரஜினிகாந்தின் அதிரடி முடிவு - போட்டியா? ஆதரவா? | Latha R Start Makkal Medai After Annamalai

இதனால், லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம் அண்ணாமலைக்கு போட்டியாக வருகிறதா அல்லது அவருக்கு ஆதரவாக செயல்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறித்த விடயம் அரசியல் களத்தை மேலும் பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.