பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாம்... வெளியான அதிர்ச்சி தகவல்!

Shocking information Latha Mangeshkar Slow Poison Given
By Nandhini Feb 07, 2022 06:05 AM GMT
Report

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் லதா மங்கேஷ்கர். இவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, லதா மங்கேஷ்கர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்தது உறுதியானது. மேலும், அவருக்கு மூச்சு திணறல் உட்பட பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் கொரோனாவிலிருந்து மீண்டதை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட வெண்டிலேட்டர் சிகிச்சை நீக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது. இதன் பின்பு, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை லதா மங்கேஷ்கர் உயிரிழந்தார்.

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை மும்பை சிவாஜி பார்க்கில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

4 வயதிலேயே பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், 65 ஆண்டுகள் இசை உலகின் முடிசூடா ராணியாக விளங்கினார். 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் இசை உலகில் உச்சத்தில் இருந்த போது இவரது வளர்ச்சி பிடிக்காத சிலர் இவர் சாப்பிட்ட உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. எழுத்தாளர் பத்மா சச்தேவ் எழுதியுள்ள தனது புத்தகத்தில் 1963ம் ஆண்டு லதா மங்கேஷ்கருக்கு மர்ம நபர் ஒருவர் ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது 33 வயதே ஆன லதா மங்கேஷ்கர், 3 நாட்கள் மரணப்படுக்கையில் கிடந்துள்ளாராம். இதனையடுத்து, அவருக்கு உணவு கொடுத்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடினார்களாம். அந்த நபர் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது.

அந்நேரத்தில் லதா மங்கேஷ்கரை போட்டியாக நினைத்த பாடகிகள் சிலர் மற்றும் பாடலாசிரியர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.   

You May Like This