லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா ?
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழம்பெரும் பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு (92) லேசான அறிகுறிகளுடன் கொரோனா அறிகுறிகளுடன் ஜனவரி 11 அன்று மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக ஐசியூ பிரிவில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
’28 நாட்களுக்கு பிறகு’ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர் இந்நிலையில் அம்மருத்துவமனையின் இணை பேராசிரியர் டாக்டர் பிரதீத் சம்தானி நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து தெரிவித்தார். அவர் கூறியதாவது,
“பாடகி லதா மங்கேஷ்கருக்கு தொடர்ந்து கவனிப்பு தேவை, அதனால் அவர் இன்னும் சில நாட்கள் ஐசியுவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். அவர் உடல்நிலை முன்பு போலவே உள்ளது; அவரை சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் உள்பட இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவித்தார்.
லதா மங்கேஷ்கர் இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர், 4 வயது முதலே திரையுலகில் பாடி வருகிறார்.
இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் லதா மங்கேஷ்கர் விரைவில் நலம்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.