மிட் நைட் பிரியாணி? இவ்வளவு ஆபத்து இருக்கு அதில்.. அவசியம் படிங்க!
மிட் நைட்டிலும் பிரியாணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
மிட் நைட் பிரியாணி
அனைத்து வயதினரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. காலை, மதியம், மாலை, இரவு, நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குறிப்பாக இரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பிரியாணி கிடைக்கும் இடத்தை தேடி குவிகின்றனர்.
ஆனால், இரவில் பிரியாணி போன்ற உணவுகளை உட்கொள்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். என்றாவது ஒரு நாள் மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது பாதுகாப்பானது இல்லை.
சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு ஆபத்தானது. ஜீரணமாவதில் பிரச்சினை உள்ளது. அதனால் வரும் பிரச்சினை நெஞ்செரிச்சலா, நெஞ்சுவலியா என்பதை அவர்களால் கண்டறிய முடியாது.
என்ன பாதிப்பு?
இதய நோய் உள்ளவர் இரவில் நன்றாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மதுவோ அல்லது குளிர்பானமோ குடித்தால், காலையில் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதன்மூலம் டைபாய்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. மதியம் வேகவைத்த முட்டையை இரவில் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் டைபாய்டு வரலாம்.
தயிர் பச்சடி செய்யும்போது தயிரில் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, ஆறிய பிறகு ஊற்ற வேண்டும். இல்லையென்றால், மஞ்சள் காமாலை வருவதற்கு வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிகரிக்கும். அதன்மூலம் இதய பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, பக்கவாதம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்புள்ளது.
முன்னதாக, கொஞ்சம் சாலட், சுண்டல் சாப்பிட்ட பிறகு பிரியாணி சாப்பிட வேண்டும். பிரியாணி சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிக்கக்கூடாது என்கின்றனர்.