லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல்

Death Property Singer Lata Mangeshkar Value
By Thahir Feb 06, 2022 11:38 AM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார்.

92 வயதான அவர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக மும்பை ப்ரீச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல் | Lata Mangeshkar Singer Death Property Value

அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் காலை 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மறைவால் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

20-க்கும் அதிகமான மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர் கடந்த 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கர் மும்மையில் மிகப்பெரிய பங்களா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்,செவ்ரலெட் உள்ளிட்ட விலையுர்ந்த ஆடம்பர கார்களை பயன்படுத்தி வந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.111 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.