மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கவரின் கோடிக்கணக்கான சொத்து இவருக்குத்தான் செல்லுமாம் - வெளியான தகவல்

Lata Mangeshkar லதா மங்கேஷ்கர் Property worth millions For him
By Nandhini Feb 09, 2022 06:28 AM GMT
Report

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கவரின் ரூ.370 கோடி மதிப்பிலான சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

தனது இனிய குரல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை மயங்கச் செய்தவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் இசை மகளாக வலம் வந்தார். தனது 13வது வயதில் 1942ம் ஆண்டு இசை உலகில் காலடி எடுத்து வைத்தார். ரூ.25 ஊதியத்தில் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கிய இவர், பின்பு ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்து நின்றார்.

தற்போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 370 கோடியாகும். மும்பையில் 'பிரபுகுஞ்ச் பவன்' என்ற பங்களாவில் வாழ்ந்து வந்த இவரின் வீட்டின் மதிப்பு பல கோடியாகும். இவருக்கு பல விலையுயர்ந்த கார்களை சொத்தாக வைத்துள்ளார். குடும்பத்தில் மூத்தவரான லதா மங்கேஷ்கருக்கு, ஆஷா போஸ்லே, மீனா கட்கர், உஷா மங்ஷே்கர் என்ற 3 தங்கைகளும், ஹிருதயநாத் மங்கேஷ்கர் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் தற்போது வசதியாக உள்ளனர்.

இவர்களில் சகோதரருக்கு சொத்து செல்லும் என்றும், லதா அவருடைய தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி அந்த பெயரில் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இரக்கிறது. பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேஷ்கரின் மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் இளைய சகோதரராவார். இவரும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கவரின் கோடிக்கணக்கான சொத்து இவருக்குத்தான் செல்லுமாம் - வெளியான தகவல் | Lata Mangeshkar Property Worth Millions For Him