லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கிறார் பிரதமர் மோடி

Death PM Modi Singer Lata Mangeshkar Playback
By Thahir Feb 06, 2022 10:43 AM GMT
Report

கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார்.

92 வயதான அவர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக மும்பை ப்ரீச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் காலை 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மறைவால் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி மும்மை செல்கிறார்