பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் காலமானார்
இந்தி திரையுலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்வர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று அவரின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டது.
இன்று காலை திடீரென லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மருத்துவமனைக்கு விரைந்தார்.
இதையடுத்து பாடகி லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரின் உயிரிழப்பு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.