பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

hospital covid19 mumbai latamangaeskhar
By Irumporai Jan 11, 2022 07:27 AM GMT
Report

பிரபல இந்தி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர். 90 வயதை எட்டிய இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வேகமாக பரவி கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.