விராட் கோலி இனி அவ்வளவு தான்... இது தான் கடைசி வாய்ப்பு - எச்சரிக்கும் முன்னாள் வீரர்
தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் விராட் கோலிக்கு மிக முக்கியமானது என முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா விராட் கோலிக்கு இந்த தொடர் மிக முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இதுவரை இந்திய அணி வீழ்த்தியது இல்லை இதை நிறைவேற்ற விராட் கோலிக்கு இது கடைசி வாய்ப்பாகவே இருக்கும் என்றும், பிசிசிஐ விராட் கோலியை அவமதித்து வரும் இந்த நேரத்தில், விராட் கோலி தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் எனவும் கனேரியா கூறியுள்ளார்.