என் கடைசி சொட்டு ரத்தம் கூட உங்களுக்குத்தான் - வீடியோ வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

health minister video vijayabaskar
By Jon Apr 05, 2021 10:36 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. இன்றுடன் இந்த பிரச்சாரம் முடிவடைகிறது. இதனையடுத்து, ஏப்ரல் 6 வாக்களிக்க வேண்டிய நாள் என்பதால் விராலிமலை மக்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விராலிமலை தொகுதி மண்ணும் மக்களும் என்னுயிர் சொந்தங்கள், இறுதி மூச்சு உள்ளவரை உங்களுக்காக உழைக்கவும், உங்களை பாதுகாக்கவும், அர்ப்பணித்திருக்கிறேன் என் வாழ்நாளை, இரட்டைஇலையே உங்கள் சின்னம், வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.