சென்னையிலிருந்து கடந்த 3 நாட்களில் ரயிலில் இருந்து 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு கடந்த 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6 லட்சம் பேர் பயணம்
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகாலை முதல் புத்தடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில்,தித்திக்குமும் தீபாவளியை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருகளுக்கு சென்றனர்.
கடந்த 19 ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
ரயில்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் இல்லாத டிக்கெட் எடுத்து 6,01,288 பேர் பயணம் செய்துள்ளனர் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.