பிரிட்டனில் தீவிரமாக பரவும் "லஸ்ஸா" காய்ச்சல்... - 3 பேர் மரணம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

warning WHO Lassa-fever Virusspreading affectUK லஸ்ஸா காய்ச்சல்
By Nandhini Feb 16, 2022 10:18 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த 2 வருடங்களாக கொரோனா பிடியில் உலக மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பல கோடி மனித உயிரைகளை கொரோனா வைரஸ் பறித்து வருகிறது.

சமீபத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்யான ஒமைக்காரன் வேகம் தற்போது குறைந்து வருகிறது. சற்று பெருமூச்சு விட்டு உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பிரிட்டனில் பரவி வருகிறது.

அந்த காய்ச்சலுக்கு லஸ்ஸா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த லஸ்ஸா வைரல் அதி பயங்கர வீரியம் கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரசைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் -

  • லஸ்ஸா வைரஸ் அரீனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது.
  • இந்த லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரோ, மலமோ உணவுகளின் மீது பட்டால், அதை சாப்பிடும் மனிதர்களுக்கு மிக எளிதாக இந்த வைரஸ் பரவிவிடும்.
  • அந்த மனிதர்கள் மூலமாக மற்றொரு மனிதருக்கு எளிதாக பரவிக்கூடியது.
  • இதுவரை இந்த வைரசால் பிரிட்டனில் 3 பேர் இறந்துள்ளனர்.
  • முதன்முதலாக 1969ம் ஆண்டு நைஜீரியாவில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  • எபோலா, மலேரியா, டைபாய்டு போன்ற ரத்தக்கசிவு காய்ச்சல் போன்றது தான் லஸ்ஸா காய்ச்சல். காய்ச்சல் கண்டறிவது மிக கடினம்.
  • லஸ்ஸாவின் தாக்கம் 2 முதல் 21 நாட்கள் வரை இருக்குமாம். அறிகுறிகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கீரத்தில் கண்டுபிடிக்க முடியாது.

பிரிட்டனில் தீவிரமாக பரவும் "லஸ்ஸா" காய்ச்சல்... - 3 பேர் மரணம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | Lassa Fever Virus Spreading In Uk

  • ஆரம்பத்தில் காய்ச்சல், உடல்சோர்வு ஏற்பட்டு, நாட்கள் செல்ல செல்ல தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், வயிற்றுவலி ஏற்படுமாம்.
  • வீரியம் அதிகமானால், முக வீக்கம், வாய், மூக்கு, பிறப்புறுப்பு, இரைப்பை குழாய் ஆகியவற்றியிருந்து ரத்தக்கசிவு ஏற்படுமாம்.
  • இந்த வைரஸ் மனிதனுக்கு தீவிரமடைந்தால் 14 நாட்களுக்குள் மரணம் ஏற்பட்டுவிடுமாம்.
  • ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஓரளவு குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இல்லையெனில் மரணம்தான்.