அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து லசித் மலிங்கா ஓய்வு!

இலங்கை அணி வீரரான லசித் மலிங்கா அனைத்து விதமான டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் தன்னுடைய யார்க்கர் பந்து வீச்சு மூலம், சிறப்பாக செயல்பட்டவர் இலங்கை வீரர் லசித் மலிங்கா.

ஆனால், தற்போதைய இளம் வீரர்கள் இவருடைய பந்தை அசால்ட்டாக எதிர் கொண்டாலும், மலிங்கா களத்தில் இறங்கினால் கொஞ்சம் பரபரப்பு இருக்கவே செய்யும் இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஐபிஎல் தொடர் உள்ளூர் தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வந்தார்.

தற்போது டி20 உட்பட அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து மலிங்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.


அதே சமயம் விளையாட்டின் உணர்வை மேம்படுத்தும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்