பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்லால் ஆபத்தா? நாசா வெளியிட்ட முக்கிய தகவல்

NASA
By Thahir Apr 26, 2023 01:21 PM GMT
Report

பூமியை இன்று நான்கு மிகப்பெரிய விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியை கடக்கும் விண்கல் 

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. இதில் மிக பெரிய அளவிலான விண்கல் மற்றும் பூமியை தாக்கும் விண்கற்கள் தான் அதிகமாக பேசப்படுகின்றன.

Largest meteorite to pass Earth

தற்பொழுது 4 விண்கற்கள் பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதில் 2023 HW மற்றும் 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டவை, மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவில் உள்ளது.

1007 அடி உயரமுள்ள விண்கல் 

இதனை தொடர்ந்து, இன்று சுமார் 1007 அடி உயரமுள்ள விண்கல் பூமியை 10 லட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்க உள்ளது.

இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், எனினும் விண்கற்களின் அசைவு கணிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.