தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு
உலகின் மிகப் பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லுண்டின் சுரங்கம்
தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் ஒரு மிகப் பெரிய வளம் நிறைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி படிவுகளில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
விகுனா கனிமப் படுகை (Vicuña Mineral Resource) என்று அழைக்கப்படும் இந்தத் தளத்தை லுண்டின் சுரங்கம் (Lundin Mining) மற்றும் பிஹெச்பி (BHP) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த இடத்தில் சுமார் 13 மில்லியன் டன் செம்பு (காப்பர்),
தங்க சுரங்கம்
32 மில்லியன் அவுன்ஸ் தங்கம் மற்றும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி ஆகியவை இருக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதில் ஃபிலோ டெல் சோல் (Filo del Sol) 1.14 சதவீதத்தில் 600 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது உள்ளது.
ஜோஸ்மரியா (Josemaria) இங்கு 0.73 சதவீதத்தில் சுமார் 200 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது இருக்கிறது. இந்தச் சுரங்கம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரக் குறைந்தது சில ஆண்டுகளாவது ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தால் வேலைவாய்ப்புகள், வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் இது அர்ஜென்டினாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.