தமிழகத்தில் மின்தடைக்கு திமுக அரசுதான் காரணம் : ஓபிஎஸ் விமர்சனம்

powercut dmkstalin
By Irumporai Apr 07, 2022 07:07 AM GMT
Report

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி : தமிழ்நாட்டின் மின் தேவை 17,300 மெகாவாட் என்றும், இதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை .

ஆனால் மத்திய அரசு 48 ஆயிரம் டன் நிலக்கரியைதான் வழங்குகிறது என்றும், பற்றாக்குறையாக உள்ள நிலக்கரியை பெற ஒப்பந்தப்ப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அதாவது, சொத்து வரி உயர்விற்குக் காரணம் மத்திய அரசு தான் என்று மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எப்படி சொன்னாரோ, அதே பாணியில்,மின் தடைக்குக் காரணம் மத்திய அரசு என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டார் அமைச்சர் அவர்கள்.அதாவது,மின் தடை பெரிய அளவில் ஏற்பட்டால் அதற்குக் காரணம் மத்திய அரசு என்பதுதான் இதன் பொருள்.

இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. ஆனால்,தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பிறர் பழி போடுவதோ அல்லது அதற்கான காரணத்தைக் கூறுவதோ கண்டனத்திற்குரியது.

எனவே,முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி,மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாக ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.