ஆடிப்பெருக்கு - பத்திரப்பதிவு செய்யபவர்களுக்கான ஸ்பெஷல் அட்வைஸ்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெறும் என்பதால், விண்ணப்பதாரர்களுக்கு பத்திரப்பதிவு துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
பெருகி வரும் என்ற ஐதீகம்
ஆடிப்பெருக்கில் புதிதாக நிலங்களை வாங்குவது வழக்கமான ஒன்றாகும். ஆடி மாதத்தில் சுபகாரிங்களை செய்யக்கூடாது என்றாலும்,
ஆடி 18-ஆம் நாளான ஆடிப்பெருக்கில் சுபகாரியங்களை மேற்கொண்டால், அது பெருகி வரும் என்ற ஐதீகம் உள்ளதால் இன்று புதிய தொழிலை துவங்குவது, நிலங்களை வாங்குவது போன்ற சுபகாரியங்களில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபடுவார்கள்.
பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு அலுவலகங்களில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்றைய தினமே வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பதிவிற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இன்று மக்கள் அதிகளவில் பத்திரப்பதிவுகளில் ஈடுபடுவார்கள் என்ற காரணத்தால், இதனை பத்திரப்பதிவு துறை முன்னேற்பாடாக செய்துள்ளது.
அதே நேரத்தில், நேரவிரயம் போன்றவற்றை தவிர்க்கவும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பத்திரப்பதிவு செய்ய எண்ணி இன்று விண்ணப்பத்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட டோக்கனுக்கான சரியான நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என்றும் பத்திரப்பதிவு துறை அறிவுறுத்தியுள்ளது.